» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:20:03 AM (IST)

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.
மேற்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான வருகின்ற 26.10.2025 மற்றும் 27.10.2025 ஆகிய இரு தினங்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மேற்படி இரண்டு தினங்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மேற்படி இரண்டு தினங்களில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழித்தடங்கள் :
தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லவும்.
அதேபோன்று குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி/ தூத்துக்குடி செல்லவும்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி/தூத்துக்குடி செல்லவும்.
எனவே இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)

மின் வாரிய அலுவலகத்தில் திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி : கோவில்பட்டியில் பரபரப்பு!
சனி 25, அக்டோபர் 2025 4:50:15 PM (IST)

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ்!
சனி 25, அக்டோபர் 2025 4:06:09 PM (IST)




