» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோல்வி பயத்தால் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் : நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:59:19 AM (IST)
தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR - Special Intensive Revision)எதிர்த்து வருகிறார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
தமிழக அரசு அனைவரையும் மது குடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மது விற்பனைக்கு ரூ.600 கோடிக்கு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அது ரூ.750 கோடியை தாண்டிவிட்டது. ஜூன் மாதத்தில் 6.30 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, செப்டம்பரில் அறுவடை செய்யப்படும் என்பது குறித்து முதல்வருக்கு முன்கூட்டியே தெரியும்.
தெரிந்திருந்தும் விவசாயிகளிடமிருந்து 60 சதவீத நெல் கொள்முதல் செய்யவில்லை. தற்போது 40 சதவீதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் திடீரென மழை வந்துவிட்டதாக வேளாண்மைத்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்ள ரூ.10 கோடிக்கு இயந்திரங்கள் வாங்குவதாக ஏற்கெனவே சட்டப்பேரவையில் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதில் யார் கூறுவது பொய் என்பது தெரியவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:51:39 PM (IST)

பாதுகாப்பில் குறைபாடு இல்லை, மக்கள் தான் எனக்கு பாதுகாப்பு : சி.பி.ராதாகிருஷ்ணன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:45:52 PM (IST)

மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)

திமுகவை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி: தவெக தலைவர் விஜய் அறிக்கை!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:57:51 PM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக நீதிபதி ஜோதிமணி தொடரலாம்: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:54:05 PM (IST)

தாய்லாந்தில் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகி போட்டி: முதுகுளத்துார் பெண் தேர்வு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:35:25 PM (IST)




