» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவில் கள்ளச் சந்தையில் வாகன பாஸ் விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் சிறப்பு அனுமதி வாகன பாஸ் கள்ளச் சந்தையில் விற்பனை என பிரபல செய்தித்தாள் செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு - சூரசம்கார விழா அன்று வழங்கப்படும் சிறப்பு பாஸ் அல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அங்குள்ள தனியார் விடுதிகளில் தங்கும் பயனர்களுக்கு தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் அத்தியாயவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி பாஸ் வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை விளக்கம்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்கார நிகழ்வு நாளன்று மட்டும் பயன்படுத்தும் சிறப்பு அனுமதி வாகன பாஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதன்படி சிறப்பு அனுமதி பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட திருச்செந்தூர் ஐடியல் வாகன நிறுத்தம் மற்றும் வனப்பார்வதி ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் சிறப்பு வாகன பாஸ் ரத்து உத்தரவை தொடர்ந்து எந்த ஒரு வாகனமும் நிறுத்தப்படவில்லை.
மேலும் சூரசம்கார விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே திருச்செந்தூர் TB சாலையில் உள்ள 70ற்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளில் தங்குவதற்கு, முன்னதாகவே புக்கிங் செய்த பயனர்களுக்கு மட்டுமே விடுதியின் வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி அவர்களின் உடைமைகளை எடுத்துச் செல்வதற்காக மட்டும் குறைந்த அளவே லாட்ஜ் பாஸ் வழங்கப்பட்டது.
அதன்படி விடுதியில் முன்னதாகவே புக்கிங் செய்து ஒருநாள் முன்பாக வரும் பக்தர்களின் வசதிக்காகவும், தூரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இருந்து அவர்களது உடைமைகளை லாடஜ் வரை எடுத்துச் செல்லும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டே விடுதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் வரை செல்வதற்கு மட்டுமே இந்த சாதாரண லாட்ஜ் பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விடுதியில் தங்கும் நேரத்திற்கு (Check-in Time) மட்டும் அனுமதி சீட்டு அனுமதிக்கப்பட்டது. மேலும் அனுமதி இன்றி லாட்ஜ் முன்போ வேறு எந்த ஒரு இடத்திலோ தனியார் வாகனங்கள் நின்றால் காவல்துறையினர் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி தனியார் வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
எனவே அதன் காரணமாக விடுதியில் தங்கும் பயனர்களுக்கு மட்டும் விடுதி பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கோயில் பராமரிப்பு பணி, மின் ஊழியர்கள் பணி, பால் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அல்லாமல் அனுமதி பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே சூரசம்கார விழா பாதுகாப்பில் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு அனுமதி வாகன பாஸ் கள்ளச் சந்தையில் விற்பனை என செய்தி வெளியானதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவிப்பதுடன் தனியார் லாட்ஜ் பயனர்கள் மற்றும் அத்தியாவசி தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் சாதாரண அனுமதி பாஸ் வழங்கப்பட்டது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெளிவுபடுத்தி விளக்கம் அளிக்கிறது.
எனவே இது போன்ற செய்தியின் உண்மைத் தன்மை தெரியாமல் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது?- அன்புமணி காட்டம்
புதன் 29, அக்டோபர் 2025 12:29:26 PM (IST)




