» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!

புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

நாகர்கோவிலில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 1 கிலோ கஞ்சா   பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி  மாவட்டம், நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு சார்பு ஆய்வாளர் திலீபன்  தலைமையிலான போலீசார் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேல கிருஷ்ணன் புதூர் ஜங்சன் அருகே  புத்தளம் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரது மகன் தனபாலன் (22) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில்  தனபாலன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

கன்னியாகுமரி  மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மேலும், போதை பொருட்கள் எதிரான நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory