» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!

புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

தூத்துக்குடியில் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி, மேலத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (29), லாரி டிரைவர். இவரது லாரி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பழுதானது. இதனால் புதுக்கோட்டை அல்லிக்குளம் ஆண்டாள் தெருவை சேர்ந்த மங்களம் மகன் பட்டு ராஜா (44) என்பவர் ஓட்டிவந்த லாரியில் இவரது லாரியை இரும்பு சங்கிலி மூலம் இணைத்து ஓட்டி வந்துள்ளார். 

புதிய துறைமுகம், மதுரை பைபாஸ் ரோடு தெர்மல் நகர் விலக்கு ரோட்டில் வரும்போது சங்கிலி அறுந்து விழுந்தது. இதனால் தமிழ்ச்செல்வன் லாரியில் இருந்து இறங்கி அதனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இவ்விபத்தில் லாரி அருகே நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

அருகில் நின்று கொண்டிருந்த பட்டு ராஜா பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவ மணி தர்மராஜ் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவரை தேடி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory