» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!

புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% என்னும் அளவில் உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், "நான் முதல்வன் திட்டத்தின் ‘கல்லூரிக் கனவு’ முன்னெடுப்பின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில், 18,855 மாணவர்களில் 18,130 மாணவர்கள் உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம், நம் தூத்துக்குடி மாவட்டத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% என்னும் அளவில் உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

கல்வியால் தலைநிமிரும் தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கையாகவுள்ள அம்மாணவர்களுக்கும், அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனைவாக்கிட துணைநின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், இத்திட்டத்தை ஈடுபாட்டுடன் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் என அனைருக்கும் எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory