» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!
புதன் 5, நவம்பர் 2025 8:50:52 AM (IST)
உடன்குடியில் பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா (45). கடந்த 2-ந் தேதி முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை பிரபலமான நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள், சைக்கிளில் இருபுறமும் சென்றனர்.
சாலையின் இருபுறமும் ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள், ஒருபுறமாக ஓட்டுங்கள் என்று முத்து மகேஷ் கூறினாராம். இதுகுறித்து ஜி.பி.முத்துவிடம், அவரது மகன்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, தம்பி இசக்கிமுத்துவின் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகிய 4 பேரும் முத்து மகேஷ் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவரை வெளியே அழைத்தனர்.
இதற்கு அவர் மறுத்ததால் அங்கிருந்த பால அமுதாவை 4 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை, கை, முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பால அமுதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார், ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!
புதன் 5, நவம்பர் 2025 12:49:22 PM (IST)

ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)

மத்திய அரசின் புதிய மின்சார சட்ட திருத்தத்தால் மின் கட்டணம் 80 சதவீதம் உயரும்
புதன் 5, நவம்பர் 2025 8:58:52 AM (IST)

முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம் : ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
புதன் 5, நவம்பர் 2025 8:48:27 AM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)




