» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி கடற்கரை நடைபாதை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பின்புறம் கடற்கரை நடைபாதை பகுதியில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் 50- க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளால் சுகாதார சீர்கேடு தொடர்பான புகார்கள் எழுந்தன. இதுகுறித்து உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் உத்தரவின்பேரில் தேவசம் போர்டு அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி தொடங்கியது. இதையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாப் பயணிகள் கடற்கரை நடைபாதையில் சுலபமாக செல்ல முடியாத அளவுக்கு இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், சுகாதாரம், சுற்றுலா வசதிக்காக தொடர்ந்து இப்பகுதி கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)




