» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!

வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)



திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 65% அதிகரித்துள்ளது என்று தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் தெரிவித்தார்.

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தமிழக பாஜக மகளிர் அணியினர் இன்றுசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பூ சுந்தர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சுத்தமாக இல்லை என்றும் 2020-ம் ஆண்டிலிருந்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 65% அதிகரித்துள்ளது. 1% அல்ல, 65% அதிகரித்துள்ளது. 

"உங்க (ஸ்டாலின்) வீட்டில் ஒரு பெண் குழந்தைக்கோ, பெண்ணுக்கோ இந்த மாதிரி கொடுமை நடந்ததுக்கு அப்புறமும், '24 மணி நேரத்துல நாங்க பிடிச்சிட்டோம்' என்பதுதான் பதிலாக வருமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். ​இன்று தமிழகத்தில் எந்தத் தாயும் பெண் குழந்தையை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டு, அது திரும்பி வரும்வரைக்கும் பயத்துடன் தான் இருக்கிறாள். 

ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், இனிமேல் அரசியலே பண்ண மாட்டேன் என்று சொல்லிட்டு வீட்டில் உட்கார வேண்டும். அதுதான் அவருக்கு அழகு. ​பாஜக மகளிர் அணியினர், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தங்களது போராட்டங்களைத் தொடர்வார்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory