» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழா : ரத்த தானமுகாம்!

செவ்வாய் 11, நவம்பர் 2025 10:22:23 AM (IST)



தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு ரத்த தானமுகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழா வங்கியின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்டமான கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனை உடன் இணைந்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக ரத்ததான முகாம் நடந்தது. ரத்ததான முகாமில் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியமான சலீ எஸ்.நாயர் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.



இந்நிகழ்ச்சியில் வங்கியின் துணைத் தலைவர் பி.ஆர்.அசோக் குமார், தலைமை நிர்வாக மேலாளர் வின்சென்ட், தலைமை கணக்கியல் அதிகாரி சஞ்சய்குமார் கோயல், பொது மேலாளர்கள் ரமேஷ், டேவிட் ஜோஸ், ஜெயராமன் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர் சாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் வங்கி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory