» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி : தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணி தீவிரம்!

செவ்வாய் 11, நவம்பர் 2025 7:49:34 PM (IST)



டில்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் தமிழக கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லியில் நேற்று மாலை காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக சுமார் 14 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்புபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு உச்ச கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது 

இந்த சம்பவம் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள், அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், ஆகியவற்றில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கடலோர கால் பாதுகாப்பு படை குழுமம் சார்பில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகம் படும்படி ஏதும் படகுகள் கடலில் ஊடுருவல் இருக்கிறதா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.‌ 3 படகுகள் மூலம் வேம்பார் முதல் பெரியதாழை வரை 5 கடல் மைல் தொலைவிற்கு உட்பட கடல் பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory