» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. : நிர்மலா சீதாராமன் பேட்டி!
செவ்வாய் 11, நவம்பர் 2025 4:37:08 PM (IST)
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இதற்கு முன்பு எஸ்ஐஆர் நடைபெறவில்லையா? 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை எஸ்ஐஆர் நடைபெற்று இருக்கிறது. ஏதோ பா.ஜ.க.வே பூதத்தைக் கொண்டு வந்தது போல கொடி பிடித்து போராட்டம் செய்வது ஏன்?வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். எஸ்ஐஆர் என்றால் என்னவென்றே துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரியவில்லை. வாக்காளர் பட்டியல் ரிவிஷனை ரெஸ்டிரிக்ஷன் என்று கூறுகிறார். எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.
ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகள் பொய்யாகவில்லை. கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்கவே எஸ்ஐஆர் பணி என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி : தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணி தீவிரம்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 7:49:34 PM (IST)

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்: டாஸ்மாக் கடை இழப்பீடு வழங்க உத்தரவு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:34:45 PM (IST)

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் தி.மு.க. நிர்வாகிகள் முறைகேடு: அன்புமணி குற்றச்சாட்டு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 4:55:47 PM (IST)

காந்தா திரைப்படத்திற்கு தடை கோரி மனு: துல்கர் சல்மான் பதிலளிக்க உத்தரவு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 4:43:38 PM (IST)

இளம் பெண் பாலியல் புகார்: வேளாண்மை துறை உதவி இயக்குனர் சஸ்பெண்ட்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 4:20:48 PM (IST)




