» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காந்தா திரைப்படத்திற்கு தடை கோரி மனு: துல்கர் சல்மான் பதிலளிக்க உத்தரவு!

செவ்வாய் 11, நவம்பர் 2025 4:43:38 PM (IST)



காந்தா திரைப்படத்துக்கு தடை கோரி பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார்.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் "காந்தா”. இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டீசர், டிரைலரால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படம் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட படமென்பதால், அவரின் மகள் வழிப்பேரன் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தியாகராஜ பாகவதரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கிய பின்பே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் அதுவரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தயாரிப்பாளரான துல்கர் சல்மான் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory