» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கல் : ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 11, நவம்பர் 2025 11:02:22 AM (IST)



குமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 91.74 சதவீதம் பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் - மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து திரும்ப பெறுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு பதிவு அலுவலர்களுடன் - மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, காணொலி காட்சி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 04.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்புப் படிவத்தினை வழங்கி வருகிறார்கள்.

அதனடிப்படையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தங்கள் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்கி வருதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். 

04.11.2025 முதல் 10.11.2025 வரை மாலை 6.00 மணி வரை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2,83,500, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2,14,1013, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 2,53,033, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,29,308, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2,36,274, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2,45,156 என மொத்தம் 14,61,284 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 91.74 சதவீதம் ஆகும்.

மேலும் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் திருத்தம் செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பங்கேற்பை மேம்படுத்துவதற்காக, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சாவடி நிலை முகவரை நியமிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. BLA "வாக்குச் சாவடி நிலை முகவர்" (பூத் நிலை முகவர்) முகவர்களாகிய நீங்கள் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் மற்றும் திருத்தும் பணியில் நீங்கள் பணியாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது மற்றும் அதில் உள்ள குறைகளை நீக்குவது போன்ற பணிகளைச் செய்வீர்கள். 

அதனடிப்படையில் நீங்கள் உங்களுடைய வார்டுக்குட்பட்ட பகுதியில் கணக்கிட்டு படிவம் கிடைக்காதவர்களுக்கு நீங்கள் உதவ முன்வர வேண்டும். குறிப்பாக நாகர்கோவில் தொகுதியில் அதிகளவு வாக்காளர்கள் இடமாறி சென்றுள்ளார்கள். அதனால் அவர்களிடம் கணக்கீட்டு படிவத்தினை வழங்குவதற்கு நீங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி செய்திட வேண்டும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இருந்தால் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு தெரிவித்து, அதனை பட்டியலிருந்து நீக்க உதவி செய்யலாம். தற்போது ஏறக்குறைய 90 சதவீதத்திற்கு மேல் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தினை பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் தயார வைத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அதனை திரும்ப பெற்றுக்கொள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு வருகை தருவார்கள்.

எனவே படிவத்தினை நிரப்ப தெரியாத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவி செய்யலாம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 1702 வாக்குசாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 7470 வாக்குச்சாவடி 2ம் நிலை முகவர்கள் கணக்கீட்டு படிவத்தினை பூர்த்தி செய்ய உதவ வேண்டும்.

தொடர்ந்து படிவத்தினை டிஜிட்டல் முறையில் படிவம் ஆனது 12280 வாக்காளர் அடையாள அட்டை வாயிலாக முன்னாள் வாக்காளர்கள் விபரம் தற்போது மேப்பிங் பணியானது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, அவர்களது விவரங்களை பூர்த்தி செய்வதற்கு உதவி மையங்கள் நிறுவப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

எனவே வாக்குசாவடி நிலை முகவர்கள் 100 சதவீதம் கணக்கீட்டு படிவங்களை, வாக்குசாவடி நிலை அலுவலர்கள் திரும்ப பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, தெரிவித்துள்ளார்கள்.

கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது சுகிதா, உதவி செயற்பொறியாளர் ஊராட்சிகள் ஏழிசை செல்வி, தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory