» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)



வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை (S.I.R) எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மதசார்பற்ற  முற்போக்கு கூட்டணி சார்பில்  மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய,பேரூர் கழக  நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory