» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:00:12 PM (IST)
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பிரதமர் மோடி நிராகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம். கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை.அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி விஜய் பிரசாரம்: காவல்துறை அனுமதி அளிப்பதில் சிக்கல்?
வெள்ளி 21, நவம்பர் 2025 8:13:03 AM (IST)

நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் : பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் அவதி
வியாழன் 20, நவம்பர் 2025 5:41:18 PM (IST)

டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: தளவாய் சுந்தரம் ஆவேசப் பேச்சு!
வியாழன் 20, நவம்பர் 2025 5:32:57 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:10:10 PM (IST)

பார்சல்களை அனுப்ப தனி ரயில் சேவை : டிச.12-ம் தேதி முதல் தொடக்கம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:10:02 PM (IST)

தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST)




