» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பார்சல்களை அனுப்ப தனி ரயில் சேவை : டிச.12-ம் தேதி முதல் தொடக்கம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:10:02 PM (IST)
தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் சேவை வருகிற டிச.12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும் ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி புறப்பட்டு 13-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ம் தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.
இதில் ரயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST)

காதலிக்க மறுத்ததால் மாணவி கொலை : கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
வியாழன் 20, நவம்பர் 2025 10:52:17 AM (IST)

அசுத்தமான ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, நவம்பர் 2025 5:44:54 PM (IST)

தலைமுடி உதிர்வால் மன வேதனை: இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!
புதன் 19, நவம்பர் 2025 5:36:37 PM (IST)

அரையாண்டுத் தேர்வுகள் டிச.10ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு!
புதன் 19, நவம்பர் 2025 5:10:01 PM (IST)

நவ.22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
புதன் 19, நவம்பர் 2025 4:36:52 PM (IST)




