» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்!

வியாழன் 20, நவம்பர் 2025 11:29:38 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. தீவிரவாதிகள் போல வந்த 13 பேர் பிடிபட்டனர். 

தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8:00 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பேக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். இதில் மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம், பழைய துறைமுகம் பகுதிகளில் தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 13பேர் பிடிபட்டனர்.  அவர்களிடம் இருந்து 2 போலி வெடிகுண்டுகள் உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், சுங்க இலாகாவினர், மீன்வளத் துறையினர், கியூ பிரிவு போலீசார், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியில் கடற்படை கப்பல், கடலோர பாதுகாப்பு படை கப்பல், ரோந்து படகு மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory