» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக் குறைவாக அனுப்பியுள்ளது: எடப்பாடி பழனிசாமி
வெள்ளி 21, நவம்பர் 2025 4:22:15 PM (IST)
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை கட்டுவதை தடுக்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது.இந்தியா கூட்டணியில் உள்ள ஸ்டாலின் இதுகுறித்து பேச வேண்டும். ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி முதல்வர் சுமுகமான முடிவை எட்ட வேண்டும்.மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள் தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்குமே? கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் மாநில அரசிடம் தான் குளறுபடி உள்ளது. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொல்லும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் சட்டம் ஒழுங்கு எப்படி சீராகும்?ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை அரசு எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடக்கவில்லை. தேர்தல் அதிகாரிகளை தாம்பரத்தில் ஒரே கதவு எண்ணில் 360 வாக்காளர்கள் உள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கக்கோரி மாவட்டந்தோறும் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையர் மீது டெல்லி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கூறியுள்ளது. நெல் ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியுள்ளோம். திமுக அரசு முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:39:47 PM (IST)

குமரி மாவட்ட வாக்காளர்களுக்கு இறுதிவாய்ப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:30:38 PM (IST)

உலக மீனவர் தினம்: கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த மீனவர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:36:39 PM (IST)

சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:27:41 PM (IST)

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை : இன்ஸ்டா பிரபலம் உள்பட 6 பேர் கைது
வெள்ளி 21, நவம்பர் 2025 11:15:03 AM (IST)




