» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

வியாழன் 27, நவம்பர் 2025 3:46:38 PM (IST)

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற பெயரில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி திட்டம் பிரத்தியோகமாக பெண் தொழில் முனைவோர்களுக்காகவே தமிழ்நாடு அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்; கீழ் நேரடி விவசாயம் / பண்ணை சார்ந்த தொழில்கள் தவிர அனைத்து வியாபாரம், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு 25மூ மானியத்துடன் வங்கி கடனுதவி பெற பெண் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10.00 இலட்சம் ஆகும். அதிகபட்ச மானியம் ரூ.2.00 இலட்சம். சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 5மூ ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன்பெற புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி, சாதி சான்றிதழ், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் https://msmeonline.tn.gov.in/twees/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு நாகர்கோவில், கோணம், தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 04652 260008 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம். பெண் தொழில் முனைவோர்கள் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று தொழில் செய்து பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory