» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிட்வா புயல் எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

வியாழன் 27, நவம்பர் 2025 5:56:32 PM (IST)

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக நாளை (நவ.,28) 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிட்வா' புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும். இன்று (நவ.,27) புதுக்கோட்டை,  ராமநாதபுரம்,  தஞ்சை,  திருவாரூர்,  நாகப்பட்டினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (நவ.,28) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு அதி கனமழை (ரெட் அலெர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர் மயிலாடுதுறை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழை (மஞ்சள் அலெர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுநாள் (நவ.,29) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நாகப்பட்டினம்

* திருவாரூர்

* மயிலாடுதுறை

* கடலூர்

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

நாளை மறுநாள் (நவ.,29) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தஞ்சை

* அரியலூர்

* பெரம்பலூர்

* கள்ளக்குறிச்சி

* திருவண்ணாமலை

* வேலூர்

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* சென்னை

* திருவள்ளூர்

நாளை மறுநாள் (நவ.,29) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* புதுக்கோட்டை

* திருச்சி

* கரூர்

* நாமக்கல்

* சேலம்

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

நவ.,30ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

* ராணிப்பேட்டை

* சென்னை

* திருவள்ளூர்

நவ.,30ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

* திருவண்ணாமலை

* வேலூர்

* விழுப்புரம்

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory