» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்க்கு சிபிஐ சம்மன்: ஜன. 12 ஆஜராக உத்தரவு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:24:08 PM (IST)
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பா் 27- ஆம் தேதி கரூரில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து, கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள், தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை அதிகரிகள், நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், தோ்தல் தலைமைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த டிசம்பர் இறுதியில் நேரில் ஆஜரான தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள்கள் விசாரணை நடத்தினர். அதேபோல், கரூா் மாவட்ட ஆட்சியா் எம். தங்கவேல், கரூா் மாவட்ட கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் உள்ளிட்டோரிடமும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவா் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
மேலும், அனைவரும் அவர்கள் தரப்பு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பித்தனர். இந்த நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிகட்டமாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வருகின்ற 12 ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்
புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 3:28:18 PM (IST)

திருச்செந்தூர் தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 7, ஜனவரி 2026 12:54:47 PM (IST)

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 7, ஜனவரி 2026 11:19:57 AM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

