» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்
புதன் 25, பிப்ரவரி 2026 10:13:52 AM (IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101), உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101),வயது முதிர்வு காரணமாக ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு மற்றும் உணவு உட்கொள்ள இயலாமை போன்ற பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 23) அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நல்லகண்ணு அவர்களுக்கு பல்வேறு துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை பாதிப்பால், அவருக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசத்தின் அளவு மற்றும் மருந்துகளின் வீரியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் 24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் - தலைவர்கள் நேரில் சந்திப்பு
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்:
முதலமைச்சர் வருகை: நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று, டீன் சாந்தாராமன் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

