» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
புதன் 1, ஏப்ரல் 2026 10:21:56 AM (IST)
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: உலக மக்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்த தினத்தைப் புனித வெள்ளியாகக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் விரதமிருந்து, தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.இத்தகைய புனிதமான நாளில் மதுக்கடைகள் திறந்திருப்பது, வழிபாட்டுக்குச் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ள சூழலில், மது விற்பனையைத் தாராளமயமாக்கி குற்றங்கள் அதிகரிக்க வழிவகை செய்திருப்பது திமுக அரசின் வேதனையான சாதனையாக உள்ளது.
குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாதைகளிலெல்லாம் மதுக்கடைகள் அமைந்திருப்பது வருத்தத்திற்குரியது. எனவே, கிறிஸ்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஏப்ரல் 3-ம் தேதி புனித வெள்ளியன்று தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!
புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)

4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி: வைகோ அறிவிப்பு
புதன் 1, ஏப்ரல் 2026 5:21:27 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)

த.வெ.க ஆதரவுடன் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
புதன் 1, ஏப்ரல் 2026 12:05:18 PM (IST)

வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
புதன் 1, ஏப்ரல் 2026 10:28:37 AM (IST)

