» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
புதன் 1, ஏப்ரல் 2026 10:28:37 AM (IST)
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை பெரும்பாலான நகரங்களில் ரூ.200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த திடீர் உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்: வணிக சிலிண்டர் விலை உயர்ந்தாலும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசியாக மார்ச் 7-ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போதைய நிலவரப்படி விலையில் மாற்றம் இன்றி நீடிக்கிறது. உதாரணமாக, ஹைதராபாத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை தற்போது ரூ.965 ஆக உள்ளது.
சென்னை: வணிக சிலிண்டர் ரூ.2246.50 - வீட்டு சிலிண்டர் ரூ.928.50
டெல்லி: வணிக சிலிண்டர் ரூ.2078.50 - - வீட்டு சிலிண்டர் ரூ.913.00
கொல்கத்தா: வணிக சிலிண்டர் ரூ.2208.00 - வீட்டு சிலிண்டர் ரூ.939.00
மும்பை : வணிக சிலிண்டர் ரூ.2031.00 - - வீட்டு சிலிண்டர் ரூ.912.50
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளதால், உணவகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மார்ச் 7-ம் தேதி செய்யப்பட்ட விலை மாற்றத்திற்குப் பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை (சென்னையில் ரூ.928.50) இன்றும் நிலையாக உள்ளது இல்லத்தரசிகளுக்கு நிம்மதி தந்துள்ளதாகத் தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!
புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)

4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி: வைகோ அறிவிப்பு
புதன் 1, ஏப்ரல் 2026 5:21:27 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)

த.வெ.க ஆதரவுடன் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
புதன் 1, ஏப்ரல் 2026 12:05:18 PM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
புதன் 1, ஏப்ரல் 2026 10:21:56 AM (IST)

