» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்

புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக

கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 1800-599-1960

வாட்ஸ்அப் செயலி எண் – 94864 54714 (whatsapp)

கைப்பேசி செயலி - C-Vigil

ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory