» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரம்: ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி!
புதன் 1, ஏப்ரல் 2026 5:26:46 PM (IST)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் ஏப்ரல் 6 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஏப்.15-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூறாவளிப் பிரச்சாரப் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.வாக்குப்பதிவு வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை டிடிவி தினகரன் அவர்கள் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளார்.
பிரச்சார அட்டவணை:
06.04.2026 திங்கட்கிழமை சைதாப்பேட்டை
07.04.2026 செவ்வாய்க்கிழமை பூந்தமல்லி
08.04.2026 புதன்கிழமை திருப்பத்தூர்
09.04.2026 வியாழக்கிழமை பெரியகுளம்
10.04.2026 வெள்ளிக்கிழமை காரைக்குடி
11.04.2026 சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி (மேற்கு)
12.04.2026 ஞாயிற்றுக்கிழமை மன்னார்குடி
13.04.2026 திங்கட்கிழமை திருவையாறு
15.04.2026 புதன்கிழமை ஓட்டப்பிடாரம்
17.04.2026 வெள்ளிக்கிழமை நாங்குநேரி
18.04.2026 சனிக்கிழமை மடத்துக்குளம்
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, அந்தந்தத் தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை அமமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேஸ் சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு: ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்!
புதன் 1, ஏப்ரல் 2026 5:37:24 PM (IST)

4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி: வைகோ அறிவிப்பு
புதன் 1, ஏப்ரல் 2026 5:21:27 PM (IST)

சுற்றுச்சுழல் பாதிப்பில்லாத தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
புதன் 1, ஏப்ரல் 2026 4:01:03 PM (IST)

தேர்தல் விதிமீறல் குறித்து 24மணி நேரமும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 1, ஏப்ரல் 2026 3:43:13 PM (IST)

த.வெ.க ஆதரவுடன் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
புதன் 1, ஏப்ரல் 2026 12:05:18 PM (IST)

வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
புதன் 1, ஏப்ரல் 2026 10:28:37 AM (IST)

