» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக வேட்பாளர் பிரசாரத்தில் ரகளை: அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:50:05 AM (IST)
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்த புகாரில், அண்மையில் திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் அஜிதா ஆக்னல். அண்மையில் அக்கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அதிலிருந்து விலகிய அவர், கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்திற்கு ஆதரவாக அக்கட்சியினர் ஆட்டோவில் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இந்த பிரசார வாகனம் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள அஜிதா ஆக்னலின் வீட்டின் அருகே வந்தபோது, அங்கிருந்த அஜிதா ஆக்னலின் ஆதரவாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல் தரப்பினர், பிரசார ஆட்டோவைத் தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வக்கீல் ஜேசுதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், அஜிதா ஆக்னல், ஜோன்ஸ் மற்றும் அடையாளம் தெரிந்த மேலும் 4 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள்: திமுக மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:24:39 PM (IST)

வீணாகப் பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: தொகுதி மறுவரையறை குறித்து இபிஎஸ் விளக்கம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:01:11 PM (IST)

தூத்துக்குடியில் சட்டநகலை எரித்து திமுக - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:25:29 PM (IST)

பேருந்து மோதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:21:37 PM (IST)

