» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!

வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனது கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் அவர், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 815 ஆக உயர்த்துவது வரவேற்கத்தக்கது.

தொகுதி மறுவரையறை செய்யும் போது மற்ற மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திற்கும் சதவீத அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இல்லையெனில், தமிழகத்தின் முக்கியத்துவம் குறைந்து பாதிப்பு ஏற்படும். இந்த விவகாரத்தில் யார் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது 90% வளர்ச்சிப் பணிகளைச் செய்தேன்; தற்போது தேய்ந்து போயுள்ள தொகுதியை மீண்டும் மீட்டெடுப்பேன். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கின்றன. எனவே, தேர்தல் ஆணையம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். மது மற்றும் லஞ்சம் இல்லாத தமிழகமே எங்களது இலக்கு என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory