» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சட்டநகலை எரித்து திமுக - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:25:29 PM (IST)

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டநகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் மத்திய அரசின் ‘தொகுதி மறுவரையறை’நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியில் அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்குச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமை தாங்கினார். இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் கலந்துகொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டநகலை அவர்கள் தீயிட்டு எரித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்த "கருப்புச் சட்டத்தை" திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள்: திமுக மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:24:39 PM (IST)

வீணாகப் பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: தொகுதி மறுவரையறை குறித்து இபிஎஸ் விளக்கம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:01:11 PM (IST)

பேருந்து மோதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:21:37 PM (IST)

எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை; ஜனநாயகத்திகே! தூத்துக்குடியில் வைரலாகும் பதாகை!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:10:35 PM (IST)

