» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டமெல்லாம் குடும்பமாகாது, திராவிடக் குடும்பமே நிலையானது: விஜய் மீது கமல்ஹாசன் விமர்சனம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:59:09 AM (IST)

"கூட்டமெல்லாம் குடும்பமாகாது, அது கலைந்துவிடும். 75 ஆண்டுகளாகக் காக்கப்பட்ட திராவிடக் குடும்பமே நிலையானது," என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர் தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து மறைமுகமாகத் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
மத்திய அரசின் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு குறித்துப் பேசிய கமல்ஹாசன், "பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதோ சொல்லி வருகிறோம். ஆனால், மத்திய அரசு இப்போது இதனைப் புதிய கண்டுபிடிப்பு போல் சொல்கிறது. இது தூண்டில் முள்ளின் நுனியில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய மீன் போன்றது. இடஒதுக்கீட்டையும், தொகுதி மறுவரையறை (Delimitation) எனும் சூழ்ச்சியையும் ஒன்றாக இணைக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு," என்றார்.
தனது நாடாளுமன்றப் பயணம் குறித்துக் குறிப்பிடுகையில், "திமுக மற்றும் அதன் கூட்டணித் தலைவர்கள் என்னை ராஜ்யசபாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். பிரசாரத்தை விடத் தமிழகத்தின் எதிர்காலம் முக்கியம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக ஒலிக்க நான் அங்குச் செல்லப்போகிறேன்," எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "இங்குப் பெருங்கூட்டம் கூடியுள்ளது. எந்த அசம்பாவிதமும் இன்றி ஒரு முன்னுதாரணமாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. வழிதவறிப் போக வேண்டாம். கூட்டமெல்லாம் குடும்பமாகாது, அது கலைந்துவிடும். திராவிடக் குடும்பம் என்பது 75 ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்ட வலிமையான குடும்பம்," எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள்: திமுக மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:24:39 PM (IST)

வீணாகப் பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: தொகுதி மறுவரையறை குறித்து இபிஎஸ் விளக்கம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:01:11 PM (IST)

தூத்துக்குடியில் சட்டநகலை எரித்து திமுக - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:25:29 PM (IST)

பேருந்து மோதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:21:37 PM (IST)

