» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் நலப்பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் தொடரும் : மேயர் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!
வெள்ளி 8, மே 2026 8:12:59 AM (IST)
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள மக்கள் நலப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் மீண்டும் தொடங்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் மே 7-ஆம் தேதி காலை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எனது நேரடி மக்கள் பணிகள் மீண்டும் தொடங்குகின்றன.தற்போது கோடைக்காலம் நிலவுவதால், மாநகரப் பகுதி மக்களுக்குத் தடையின்றிச் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகத் தொடங்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டிருந்த சாலை மேம்பாட்டுப் பணிகளை மீண்டும் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் துறைமுகம் இணைந்து புதிய துறைமுகக் கடற்கரைப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைத்து வரும் பூங்கா பணிகள் மற்றும் நீச்சல் குளம் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். திமுக தலைவருக்கும், கட்சித் தலைமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் எங்களது மக்கள் பணிகள் அர்ப்பணிப்புடன் தொடரும்" என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி இந்தச் சந்திப்பின் போது உறுதிபடத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்வர் விஜய் திட்டம்!
திங்கள் 11, மே 2026 12:24:01 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதையை செய்ய தவறினாரா விஜய்? சமூக வலைதளங்களில் வைரல்!
திங்கள் 11, மே 2026 12:01:56 PM (IST)

விஜய்யின் 200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்கு லாபம்? யாருக்கு ஏமாற்றம்? - முழு விபரம்!
திங்கள் 11, மே 2026 11:24:51 AM (IST)

தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
திங்கள் 11, மே 2026 11:17:00 AM (IST)

17-ஆவது சட்டப்பேரவை கூடியது: முதல்வர் விஜய் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்பு!
திங்கள் 11, மே 2026 10:45:41 AM (IST)


