» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு விண்ணப்பம்: சிறப்பு தட்கல் முறையில் இன்று கடைசி நாள்
செவ்வாய் 16, ஜூன் 2026 10:43:17 AM (IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூன் 16) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்கள், தனித்தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு சிறப்பு தட்கல் முறையில் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்கள் வாயிலாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் படித்து தோல்வியடைந்தவர்கள், வருகை புரியாதவர்கள், தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களில் விண்ணப்பித்திட மீண்டும் இன்று ஒரு நாள் மட்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது கால்ஷீட்? தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:53:37 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:40:24 PM (IST)

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:52:47 AM (IST)

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:34:25 AM (IST)


