» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு

செவ்வாய் 16, ஜூன் 2026 10:52:47 AM (IST)

முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்​யப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். பெரி​யாரின் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி இத்​திட்​டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்​கு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த திமுக ஆட்​சி​யில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்​கப் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2022 செப்​.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இத்​திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர், அரசு உதவி​பெறும் தொடக்​கப் பள்​ளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. விரி​வாக்க திட்​டத்தை ஸ்டா​லின் 2023 ஆக.25-ம் தேதி தொடங்​கி​வைத்​தார். தற்​போது 17.55 லட்​சம் மாணவ, மாணவி​கள் இத் திட்​டத்​தால் பயன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரி​வாக்​கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவி​களுக்கு விரி​வாக்​கம் செய்ய ஏது​வாக, பெரி​யார் பிறந்த நாளான செப்​.17-ம் தேதி தொடங்​கு​வதற்கு நடவடிக்கை மேற்​கொள்​ளு​மாறு சமூக நலத் துறை அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார்.

மேலும் ‘‘சமூக நலம், மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களை, பயனாளர்​களான குழந்​தைகள், பெண்​கள், திருநங்​கைகள், மூத்த குடிமக்​களிடம் தடை​யின்​றி, துரித​மாக கொண்டு சேர்க்க வேண்​டும். குழந்​தைகள் பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும். போதைப் பொருள் பழக்​கத்​துக்கு ஆளா​காத​படி அவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். அந்த பழக்​கத்​துக்கு ஆளான குழந்​தைகளை மீட்டு மறு​வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றும் அறி​வுறுத்​தி​னார். 

இந்த கூட்​டத்​தில் சமூக நலம், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி, தலை​மைச் செயலர் சாய்​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரின் காலை உணவுத் திட்ட விரி​வாக்​கம் குறித்​து, கூட்​டத்​தில் பங்​கேற்ற உயர் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘‘முதலில் அரசு நடுநிலைப் பள்​ளி​களில் மட்​டும் இத்​திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வதா அல்​லது அரசு மற்​றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்​ளி​களி​லும் சேர்த்தே அமல்​படுத்​து​வதா என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும். அப்​போது​தான் எத்​தனை மாணவ, மாணவி​கள்​ பயன்​பெறு​வார்​கள்​ என்​ற விவரம்​ தெரிய​வரும்​’’ என்​று தெரி​வித்​தனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory