» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி- சென்னை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம் : முன்பதிவு தொடக்கம்

வெள்ளி 3, ஜூலை 2026 10:21:15 AM (IST)

Train4i43i.jpg

தூத்துக்குடி- சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி- சென்னை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 11:30 மணிக்கு  புறப்படும். இதுபோல் தாம்பரத்தில் இருந்து ஜூலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மாலை 03:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.  மறுநாள் 12- 30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

நிறுத்தங்கள் : தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு.

இதுபோல் வண்டி எண் 06017 சென்னை தாம்பரத்தில் இருந்து ஜூலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மாலை 03:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு ரயில்களை வழங்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Jul 5, 2026 - 10:10:24 PM | Posted IP 104.2*****

திமுக ஆட்சியில் இதே நிறைய பிரச்னைகள் இருக்கு, நிறைய பேர் MLA கண்ணுமுழியிடம் மனு கொடுத்தாச்சே அது எங்கே போச்சு?? திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி திருப்பி சொல்லவேண்டிய நிலை இனி வரும் காலங்களில் சிறப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Gnanasekar AccuJul 5, 2026 - 08:06:24 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் முன் பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்க வேண்டும் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல பல ரயில்கள் உள்ளன என்பதால் இதை முதலில் செயல்படுத்த வேண்டும் நன்றி

உங்கள் நாங்கள்Jul 5, 2026 - 03:56:42 PM | Posted IP 162.1*****

திருநெல்வேலியிலிருந்து வேளாங்கன்னி செல்ல இரயிலை இயக்க வேண்டுகின்றேன். திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் சுரண்டை வழியாக சங்கரன்கோவில் செல்ல புதிய இரயில் பாதை அமைத்தால் மக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள்

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINJul 5, 2026 - 12:09:03 PM | Posted IP 172.7*****

திருச்சி திருவனந்தபுரம் இன்டர் சிற்றி விரைவு ரெயிலை இரு மார்க்கத்திலும் தூத்துக்குடிக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா????

எம் குமார் முன்னாள் தலைவர் கடம்பாடி கிராமம் மாமல்லபுரம் பக்கம் செங்கல்பட்டு மாவட்டம்Jul 4, 2026 - 03:12:53 PM | Posted IP 162.1*****

தயவு திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்ய இரண்டு மார்கத்திற்க்கும் பகல் நேரத்தில் தொடர் வண்டி இயக்கினால் பக்தர்களுக்கு சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய மிகவும் சிறப்பாக இருக்கும்

K.R.AravindJul 4, 2026 - 11:58:51 AM | Posted IP 104.2*****

Villupuram to Tanjavur Route Double Railway line a Mathanum a

Mahesh AntonyJul 4, 2026 - 11:01:31 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல ஒரேயொரு ரயில் மட்டுமே இருக்கிறது. கூடுதலாக ரயில் விடவும், வந்தேபாரத் தூத்துக்குடியில் இருந்து இயக்கவும். மேலும் வேளாங்கண்ணி செல்ல தென் மாவட்டங்களில் இருந்து ரயில் சேவை கிடையாது, எனவே பரிசீலித்து தூத்துக்குடியில் இருந்து இயக்கவும் பயணிகள் நலச்சங்கம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

DineshJul 3, 2026 - 07:31:16 PM | Posted IP 104.2*****

Train #18045 East Coast Express running between Howrah and Vizag should be extended all the way to Tuticorin. It makes more sense for this express to run all of east coast as the name suggests.

BerlinJul 3, 2026 - 06:02:05 PM | Posted IP 162.1*****

Please this train permanently

பிச்சாண்டிJul 3, 2026 - 04:02:52 PM | Posted IP 104.2*****

திருநெல்வேலி வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் நின்று செல்ல பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்தால் உதவியாக இருக்கும்

பிச்சாண்டிJul 3, 2026 - 03:41:21 PM | Posted IP 104.2*****

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சென்னையில் இருந்து வரும் முத்து நகர் விரைவு இரயில் தவிர வேறு எந்த இரயிலும் வாஞ்சி மணியாச்சி நிறுத்தத்தில் நிற்பதில்லை ஆகவே சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னை செல்லும் இரயில்கள் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் நின்று செல்ல பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்தால் உதவியாக இருக்கும்

ஹென்றிJul 3, 2026 - 01:17:49 PM | Posted IP 162.1*****

இந்த ரயிலை நிரந்தர தினசரி ரயிலாக மாற்றினால் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் குறையும்.

மக்கள்Jul 3, 2026 - 10:52:16 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலை பழைய மாநகராட்சி பின்புறம் உள்ள ரயில்வே காம்பவுண்ட் சுவரை இடித்து அதில் பெரிய நுழைவாயிலையும் இருவழி சாலையையும் அமைக்க பயணியர் சங்கத்தினர் கோரிக்கை வைக்கவேண்டும்

Mariappan SrinivasanJul 3, 2026 - 10:40:02 AM | Posted IP 172.7*****

These specials have to be permanently operated. After patronge increases frequency have to be increased.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory