» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துகிறார் முதல்வர் விஜய் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சனி 4, ஜூலை 2026 8:47:38 AM (IST)

முதலமைச்சர் விஜய் சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துவதாக திமுக தலைபர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். இக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருப்பது இந்த ‘டேக் டைவர்ஷன்’ அரசின் திசைதிருப்பும் நடவடிக்கையாகும். தொகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்."

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பெண் ஒருவர் கொடுத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு, அனிதா ராதாகிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அவசரத்தைக் காட்டுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் நடைபெறும் குற்றங்களைத் தடுக்காமல், விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்து காலத்தைக் கடத்த முதலமைச்சர் நினைக்கிறார் என்றும், "ஆணவம் அழிவிற்கு வழி" என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதேபோன்று, இக் கைது நடவடிக்கையைக் கண்டித்துக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களது பலத்த கண்டனக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory