» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
புதன் 22, ஜூலை 2026 8:05:32 AM (IST)

பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கடந்த 30-ஆம் தேதி கால்நாட்டுகளுடன் ஆனித் திருவிழா தொடங்கியது. கடந்த 14-ஆம் தேதி அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மறுநாள் அதிகாலை 1 மணிக்கு ஆனி பெருந்திருவிழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, உற்சவர் நாராயணர், பாமா, ருக்மணி அம்பாள்களுடன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
எட்டாம் திருநாளான தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று மதியம் 1 மணிக்கு முத்துமாலை அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோவிலைச் சுற்றி நறுமணப் பொருட்கள் அடங்கிய தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டன.தொடர்ந்து நாராயண சுவாமி, அம்பாள்களுடன் தாமிரபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடைபெற்றது.
ஆற்றுப்படுக்கையில் சப்பரத்தில் எழுந்தருளிய நாராயணருக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவிலைச் சுற்றி வலம் வந்து பீடத்தைச் சென்றடைந்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளைக் குரங்கணி 60 பங்கு ஊர்மக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)


