» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆடி கிருத்திகை விழா: தூத்துக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை - திரளான பெண்கள் வழிபாடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:11:56 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் சேவை மற்றும் 108 திருவிளக்கு தீப பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை வார வழிபாட்டு மகளிர் சங்கத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்புத் திருவிளக்கு தீப பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டுச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 108 திருவிளக்கு தீப பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தீபமேற்றிப் பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.

அம்பிகையின் ஊஞ்சல் சேவை மற்றும் தீப பூஜையில் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இச்சிறப்புப் பூஜைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவன் கோவில் பிரதான பட்டர் செல்வம் சிறப்பாகச் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:45:19 PM (IST)

பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:59:50 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சர்வதேச அங்கீகாரம் : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:18:58 PM (IST)

தமிழக அரசின் அறநிலையத் துறை மாநிலக்குழு உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி நியமனம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:07:29 PM (IST)

சைபர் குற்றவாளிகளுக்கு வாடகை வங்கி கணக்கு: தமிழகம் முழுவதும் 837 பேர் அதிரடி கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)


