» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)

ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்து அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தோவாளை பூச்சந்தைக்குக் குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவில் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. ஓணம் பூக்கோலங்களுக்காகக் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரளாக வந்து பூக்களைப் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

தேவை அதிகரிப்பு காரணமாக  தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பிச்சிப் பூ கிலோ ரூ. 750-லிருந்து ரூ. 500 உயர்ந்து, தற்சமயம் ரூ. 1,250-க்கு விற்பனையாகிறது. முல்லைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 450 உயர்ந்து, ரூ. 1,150-க்கு விற்பனையாகிறது. மல்லிகைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 200 உயர்ந்து, ரூ. 900-க்கு விற்பனையாகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory