» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மணல் திட்டின் மீது மோதிய விபத்தில், காரில் பயணித்த 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி நோக்கி 'இன்னோவா' கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூர் அருகே பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்பாராத விதமாக கார், மேம்பால வேலை காரணமாக அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் திரும்பாமல், நேராகச் சென்று சாலையிலிருந்த மணல் திட்டின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த 6 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் அனைவரும் அதே காரில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:43:30 PM (IST)

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:25:05 AM (IST)

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:15:22 AM (IST)


