» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயிலைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா காலங்களில் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு இரண்டு சேவைகள் கொண்ட வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டுகளில் நாகர்கோவிலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில், போதிய காலஅவகாசம் இன்றியும், திருவனந்தபுரத்துடன் இணைப்பு இல்லாததாலும் பயணிகளிடம் போதிய வரவேற்பைப் பெறாமல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலின் காலஅட்டவணை கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.
ரயில் இயங்கும் நேரம் மற்றும் வழித்தடம்:
இந்தச் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 29-ம் தேதி சனிக்கிழமை மாலை 19:30 மணிக்கு புறப்படுகிறது.
புறப்படும் நேரம் (சனிக்கிழமை):
திருவனந்தபுரம் வடக்கு – 19:30
திருவனந்தபுரம் - 19:47
நெய்யாற்றின்கரை – 20:15
குழித்துறை – 20:40
இரணியல் – 20:54
நாகர்கோவில் டவுன் – 21:07
வள்ளியூர் – 21:43
நான்குநேரி – 21:54
திருநெல்வேலி – 22:05
தொடர்ந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக பயணித்து, ஞாயிற்றுக்கிழமை காலை 08:40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
மறுமார்க்கம் (ஞாயிற்றுக்கிழமை): வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 19:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திங்கள்கிழமை காலை திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.
திருநெல்வேலி – 03:50
நான்குநேரி – 04:20
வள்ளியூர் – 04:30
நாகர்கோவில் டவுன் – 05:13
இரணியல் – 05:25
குழித்துறை – 05:39
நெய்யாற்றின்கரை – 06:10
திருவனந்தபுரம் வடக்கு – 07:30
இந்த ரயில் மொத்தம் 606 கி.மீ தூரத்தை, மணிக்கு 46 கி.மீ வேகத்தில், 16 நிறுத்தங்களுடன் 13:10 மணி நேரத்தில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணித்து 12 மணி நேரத்தில் இலக்கை அடைகிறது.
வேளாங்கண்ணி பேராலயத் தமிழ் திருப்பலி நேரங்கள்: ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் காலை 07:30 மணி & நண்பகல் 12:00 மணி (கீழ் பேராலயம் தமிழ் திருப்பலிகள் நடைபெறுகிறது. இந்த ரயிலில் பயணிக்கும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 08:40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைவதால், மதியம் நண்பகல் 12:00 மணி தமிழ் திருப்பலிகளில் எளிதாகப் பங்கேற்க முடியும்.
ஞாயிறு மதியம் திருப்பலியில் பங்கேற்று விட்டு, இரவு 19:30 மணிக்கு மீண்டும் புறப்படும் அதே ரயிலைப் பிடித்து, திங்கட்கிழமை காலையிலேயே பணிக்கும் திரும்புவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதால் விடுமுறை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை
பயணிகளுக்கு வேண்டுகோள்:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி, கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் அதிகாலை 04:40 மணிக்கெல்லாம் திருச்சி , தஞ்சாவூர் 05:40 மணிக்கு சென்றடையும் வகையில் ரயில் நேரம் அமைந்துள்ளது. இது திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
இந்த ரயிலை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பட்சத்தில், இதனைத் தொடர்ந்து இயக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தற்போது இந்த ரயிலில் அதிக அளவில் முன்பதிவு இருக்கைகள் காலியாக உள்ளதால், பொதுமக்கள் இந்த சேவையை அதிக அளவில் பயன்படுத்தி பயனடையுமாறு குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:43:30 PM (IST)

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:25:05 AM (IST)

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:15:22 AM (IST)


