» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி முகூர்த்தத் திருமணங்கள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:58:30 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சுபமுகூர்த்த தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.
ஆவணி வளர்பிறை முகூர்த்தத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கோயில் நடை அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் சிறப்புடன் நடைபெற்றன.
அதிகாலை முதலே கடலிலும், நாழிக் கிணற்றிலும் புனித நீராடிய பக்தர்கள், இலவச பொதுத் தரிசனம், ரூ. 100 கட்டணத் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழித்தடம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த நாளையொட்டி, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான மணமக்கள் ஜோடிகளுக்குக் கோயிலின் சண்முக விலாச மண்டபத்தில் திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றன.
இதன் காரணமாகக் கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் பக்தர்கள் மற்றும் உறவினர்களின் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.
திருமண விழா மற்றும் சாமி தரிசனத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஆ. அருணாசலம், துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:36:48 PM (IST)

4 கிலோவாட் மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:07:58 AM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)


