» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை செஸ்: திவ்யா தேஷ்முக் சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை!

செவ்வாய் 29, ஜூலை 2025 11:39:57 AM (IST)



ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​ திவ்யா தேஷ்​முக் சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​தார்.

ஜார்​ஜியா நாட்​டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் இறு​திப் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான 38 வயதான கோனேரு ஹம்​பி, சகநாட்​டைச் சேர்ந்த 19 வயதான சர்​வ​தேச மாஸ்​ட​ரான திவ்யா தேஷ்​முக்​குடன் மோதி​னார். இரண்டு கிளாசிக்​கல் ஆட்​ட​மும் டிரா​வில் முடிவடைந்​ததை தொடர்ந்து வெற்​றி​யாளரை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டம் இன்று நடை​பெற்​றது.

இதில் முதல் ஆட்​டத்​தில் வெள்ளை நிற காய்​களு​டன் திவ்யா தேஷ்​முக் விளை​யாடி​னார். இந்த ஆட்​ட​மும் டிரா ஆனது. தொடர்ந்து அடுத்த ஆட்​டத்​தில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய திவ்யா தேஷ்​முக், 2 முறை உலக ரேப்​பிடு சாம்​பிய​னான கோனேரு ஹம்​பியை 2.5-1.5 என்ற கணக்​கில் வீழ்த்தி உலக சாம்​பியன் பட்​டம் வென்​றார். மகளிர் உலகக் கோப்​பை​யில் இந்​திய வீராங்​கனை சாம்​பியன் பட்​டம் வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும். 

உலக சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள அதே நேரத்​தில் கிராண்ட் மாஸ்​டர் அந்​தஸ்​தை​யும் பெற்​றுள்​ளார் நாக்​பூரை சேர்ந்த திவ்யா தேஷ்​முக். இந்​திய வீராங்​க​னை​களில் கிராண்ட் மாஸ்​டர் பட்​டம் வெல்​லும் 4-வது நபர் திவ்யா தேஷ்​முக் ஆவார். இதற்கு முன்​னர் கோனேரு ஹம்​பி, ஹரிகா துரோணவள்​ளி, ஆர்​.வைஷாலி ஆகியோ​ரும் கிராண்ட் மாஸ்​ட​ராகி இருந்​தனர். உலக அளவில் 88-வது மகளிர் கிராண்ட் மாஸ்​டர் என்ற பெரு​மை​யை​யும் திவ்யா தேஷ் முக் பெற்​றுள்​ளார்.

சாம்​பியன் பட்​டம் வென்ற திவ்யா தேஷ்​முக் ரூ.43.24 லட்​சம் பரிசுத் தொகை​யை​யும், 2-வது இடம்​ பிடித்​த கோனேரு ஹம்​பி ரூ.30.26 லட்​சம்​ பரிசுத்​ தொகை​யை​யும்​ பெற்​றனர்​. உலக சாம்​பிய​னான திவ்யா தேஷ்​முக்​கும், 2-வது இடம் பிடித்த கோனேரு ஹம்​பி​யும் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள கேண்​டிடேட்ஸ் தொடருக்கு நேரடி​யாக தகுதி பெற்​றுள்​ளனர். 8 பேர் கலந்து கொள்​ளும் கேண்​டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் நடப்பு சாம்​பிய​னான சீனா​வின் வென்​ஜுன் ஜூவுக்கு எதி​ராக போட்​டி​யிடு​பவர் தேர்வு செய்​யப்​படு​வார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory