» சினிமா » செய்திகள்
நடிகர் சங்க கட்டிட பணிக்காக நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி
திங்கள் 29, ஏப்ரல் 2024 4:24:59 PM (IST)
நடிகர் சங்க கட்டிட வளர்ச்சிக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர். மேலும், பல்வேறு நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் நெப்போலியன், நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடியை வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/vidamuyarchifans_1738835931.jpg)
விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/paranthupo_1738412281.jpg)
சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/parasakthisivakasivaji_1738303458.jpg)
பராசக்தி டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது - நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை
வெள்ளி 31, ஜனவரி 2025 11:31:50 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/kichasudeep_1737700769.jpg)
கர்நாடக அரசின் விருதை நிராகரித்த கிச்சா சுதீப்!
வெள்ளி 24, ஜனவரி 2025 12:07:26 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/biggboss8_1737350156.jpg)
பிக்பாஸ் சீசன் 8 : பட்டம் வென்றார் முத்துக்குமரன்!
திங்கள் 20, ஜனவரி 2025 10:43:49 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/shankarkamal_1737026173.jpg)
இந்தியன் 3 எப்போது வெளியாகும் : ஷங்கர் தகவல்!
வியாழன் 16, ஜனவரி 2025 4:45:25 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/nellaionline_default.jpg)