» சினிமா » செய்திகள்

மூன் வாக்: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் இசைப்புயல் - நடனப்புயல்!

புதன் 19, ஜூன் 2024 4:27:39 PM (IST)



25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு ‘மூன் வாக’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ‘பகீரா’ படம் வெளியானது. தற்போது அவர் விஜய்யுடன் இணைந்து ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேட்ஸ்’ என 90-களில் இந்தக் கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களுக்கும் ஹிட்டடித்தன. கடைசியாக 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, படத்துக்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான் இந்தியா படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியல்!

வியாழன் 24, அக்டோபர் 2024 10:38:41 AM (IST)

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!

திங்கள் 14, அக்டோபர் 2024 8:56:05 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory