» சினிமா » செய்திகள்

கள்ளச் சாவுக்கு எதுக்கு 10 லட்சம்? நடிகர் பார்த்திபன் கண்டனம்

சனி 22, ஜூன் 2024 11:51:17 AM (IST)

விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எதுக்கு 10 லட்சம்? என்று நடிகர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 52 ஆக உயர்ந்துள்ளது. விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை அரசு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் பார்த்திபன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளச் சா....வுக்கு எதுக்கு நல்லச் சாவு (10 லட்சம்)? என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியல்!

வியாழன் 24, அக்டோபர் 2024 10:38:41 AM (IST)

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!

திங்கள் 14, அக்டோபர் 2024 8:56:05 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory