» சினிமா » செய்திகள்

லோகேஷ் - ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு துவக்கம்!

வெள்ளி 5, ஜூலை 2024 5:34:39 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று (ஜூலை 5) துவங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நடிகர் ரஜினி நேற்று சென்னையிலிருந்து ஹைதராபாத் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory