» சினிமா » செய்திகள்
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
திங்கள் 6, ஜனவரி 2025 5:24:03 PM (IST)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த தேவிஸ்ரீ பிரசாத் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இப்படத்திற்கான டப்பிங் பணியை சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நிறைவு செய்துள்ளார். இது குறித்து புகைப்படங்களை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டிருந்தார்.
இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் மற்றொரு படமான 'விடாமுயற்சி' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்ததால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் தற்போது 'விடாமுயற்சி' படமும் ஒரு சில காரணத்தால் பொங்கல் பண்டிகையில் வெளியாக வில்லை. இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மறைவு : ரஜினிகாந்த் அஞ்சலி
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:47:24 PM (IST)

ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம்: கமல்ஹாசன் பேட்டி
சனி 15, நவம்பர் 2025 5:23:57 PM (IST)

காந்தா படத்துக்கு எதிராக வழக்கு: ராணா பதிலடி
வியாழன் 13, நவம்பர் 2025 3:52:57 PM (IST)

ரஜினி படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகல்!
வியாழன் 13, நவம்பர் 2025 3:32:58 PM (IST)

3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பாடகி! - கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்!
புதன் 12, நவம்பர் 2025 10:58:12 AM (IST)

உருவ கேலி: யூடியூபருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:41:03 PM (IST)

