» சினிமா » செய்திகள்
சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்: ஜூலையில் தாெடக்கம்..?
வியாழன் 12, ஜூன் 2025 12:00:32 PM (IST)

இயக்குநர் வெற்றி மாறன் - சிம்பு இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை 1 & 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அறிவிப்புகளும் முறையாக வெளியானதுடன் ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்னும் விஎஃப் எக்ஸ் பணிகள் முடியாததால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். நிலைமை இப்படியிருக்க, இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னையைப் பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16 ஆம் தேதி சென்னை எண்ணூரில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முதலில் சிம்புவுக்காக எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)
