» சினிமா » செய்திகள்

ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!

சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)

ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில், அப்படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ், எடிட்டர் யூனியனில் (படத்தொகுப்பாளர்கள் சங்கம்) இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

'ஜனநாயகன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம், படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாகச் சந்தேகத்தின் பேரில் 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் முக்கிய குற்றவாளி உட்பட 9 பேரைக் கைது செய்தனர். இந்த விசாரணையில், ஒரு 'ப்ரீலான்ஸ்' (Freelance) உதவி எடிட்டர் மூலமாகவே படம் சமூக வலைதளங்களில் கசிந்தது உறுதியானது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, எடிட்டர் யூனியன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, எடிட்டர் பிரதீப் ராகவ் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். படம் கசிந்ததற்கு அவர் நேரடி காரணம் இல்லை என்றாலும், பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டது மற்றும் சங்க விதிகளை மீறி, உறுப்பினர் அல்லாத ஒருவரைத் தனது உதவியாளராகப் பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory